உக்ரேன் தாக்குதலால் பற்றி எரியும் ரஷ்யா எண்ணெய்க் களஞ்சியங்கள்
12 பங்குனி 2024 செவ்வாய் 09:09 | பார்வைகள் : 8962
உக்ரேன் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யாவின் இரு நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் களஞ்சியங்கள் தீப்பற்றி எறிவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேஸ்டோவோ மற்றும் ஒரியோல் நகரங்களிலுள்ள எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இவ்விரு நகரங்களும் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் இடைவெளியில் உள்ளன.
கேஸ்டோவோ நகரம் மொஸ்கோவுக்கு கிழக்கே 450 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.
ரஷ்யாவின் பல நகரங்கள் மீது உக்ரேன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இரு நகரங்களில் எண்ணெய்க் களஞ்சியங்கள் தீப்பற்றியுள்ளன.
இந்நிலையில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளில் விசேட படையினர் ஈடுபட்டுள்ளனர் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan