இந்த கோடைகாலத்தில் 400,000 மேலதிக இருக்கைகள்!

12 பங்குனி 2024 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 16656
கோடைகால தொடருந்து பயணங்களுக்கான சிட்டைகளின் விற்பனையை SNCF ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் 400,000 இருக்கைகள் மேலதிகமாக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட கோடைகாலம் சிறப்பு மிக்க ஒரு பகுதியாக அமையும் எனவும், ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற திட்டமிட்டுள்ளதால், தலைநகரில் மேலதிகமாக பல இலட்சம் மக்கள் ஒன்றுகூடுவார்கள் என அறிய முடிகிறது.
நாளை மார்ச் 13 ஆம் திகதி புதன்கிழமை முதல் TGV INOUI, OUIGO மற்றும் Intercités தொடருந்துகளுக்கான பயணிச்சிட்டைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் எனவும், இந்த பயணச்சிட்டைகள் ஜூலை 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி வரையான நாட்களில் பயணிக்க விரும்புவர்கள் மாத்திரமே முன்பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025