ரஜினி பட தயாரிப்பாளருடன் கைக்கோத்த ஏ.ஆர்.முருகதாஸ்... ஹீரோ யார் தெரியுமா?
12 பங்குனி 2024 செவ்வாய் 06:57 | பார்வைகள் : 7296
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பாலிவுட்டில் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா தயாரிக்கிறார். இந்த செய்தியை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ள முருகதாஸ், படம் குறித்தான சூப்பர் அப்டேட்டையும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா இயக்குநர்கள் பாலிவுட்டிலும் மெல்ல ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ’ஜவான்’ படத்தின் வெற்றி மூலம் அட்லி மாஸ் காட்டினார் என்றால் அவருக்கு முன்பே பாலிவுட்டில் ஹிட் படங்கள் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது தமிழில் ‘தர்பார்’ படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்திற்கு அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்புகிறார். இவர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சஜித் நாடியாட்வாலா தயாரிக்கிறார்.
சமீபத்தில் ரஜினியைச் சந்தித்த சஜித் நாடியாட்வாலா அவருடன் புதிய படத்தில் இணைந்திருப்பதாக சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கும் புதிய படத்தை சஜித் தயாரிப்பதாகவும் அதில்தான் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. இந்தப் படத்தை அறிவித்த கையோடு, இப்போது முருகதாஸ் - சல்மான் கான் கூட்டணியில் உருவாகும் படத்தைத் தயாரிக்கிறார் சஜித்.
இது ஏற்கெனவே சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கிக்’ படத்தின் இரண்டாம் பாகம் எனச் சொல்லப்படுகிறது. படம் குறித்தான செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ள முருகதாஸ், இந்தப் படம் அடுத்த வருடம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.


























Bons Plans
Annuaire
Scan