வவுனியா பாடசாலையொன்றில் இருந்து 7 மோட்டர் குண்டுகள் மீட்பு!

12 பங்குனி 2024 செவ்வாய் 06:08 | பார்வைகள் : 11933
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து சில மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025