Paristamil Navigation Paristamil advert login

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாமில் இன்று முழு அடைப்பு

12 பங்குனி 2024 செவ்வாய் 00:53 | பார்வைகள் : 5746


மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாமில் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாநிலத்தின் பல பகுதிகளில் அசாம் மாணவர் அமைப்புகள் நேற்று இந்த சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) டார்ச் லைட் பேரணி, சத்தியாகிகரம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்து உள்ளன.

இதைப்போல 16 எதிர்க்கட்சிகள் இணைந்த ஐக்கிய எதிர்க்கட்சி மன்றம் மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு (பந்த்) நடத்த அழைப்பு விடுத்து உள்ளது.இந்த போராட்டங்களால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்