Seine-et-Marne : இளம் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்!!

11 பங்குனி 2024 திங்கள் 16:11 | பார்வைகள் : 11360
20 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Lagny-sur-Marne (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் rue Ambroise-Paré வீதியில் நள்ளிரவு 12.40 மணி அளவில் பேருந்தில் இருந்து இறங்கி, வீதியை கடந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், அப்பெண்ணை கத்தி ஒன்றினால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலை சற்று எதிர்பாராக குறித்த பெண் நிலை தடுமாறி விழுந்தார். அவர் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், Grand Hôpital de l'Est மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர் தேடப்பட்டு வருகிறார். அப்பெண்ணிடம் இருந்து பொருட்கள் எதையும் திருடவில்லை எனவும், தாக்குதலின் நோக்கம் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025