சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு சென்ற ஐவர் பலி

11 பங்குனி 2024 திங்கள் 15:54 | பார்வைகள் : 7465
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் காணாமல் போன ஐவர் உயிரிழந்துள்ளதாக சுவிஸ் பொலிஸார் இன்று (11) தெரிவித்துள்ளனர்.
இத்தாலியுடனான எல்லைக்கு அருகிலுள்ள, பிரசித்திபெற்ற மெட்டர்ஹோர்ன் மலைப்பகுதிதியில் பனிச்சறுக்கில் ஈடுபடுவதற்காக சென்றிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 6 பேர் காணாமல் போயிருந்தனர்.
அவர்களை கண்டுபிடிப்பதற்காக தேடுதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த பொலிஸார் மற்றொருவரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதையோ அவர்களின் வேறு அடையாளங்களையோ அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025