இரட்டை வேடத்தில் த்ரிஷா ?
11 பங்குனி 2024 திங்கள் 15:02 | பார்வைகள் : 10948
பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு தமிழில் தற்போது விடாமுயற்சி, தக்லைப் படங்களிலும், மலையாளத்தில் ராம், ஐடெண்டிட்டி படங்களிலும், தெலுங்கில் விஸ்வம்பரா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிக்கும் விஸ்வம்பரா படத்தில் அவர் இரண்டு வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டே நகருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் தான் கதையின் நாயகியாக நடித்த மோகினி என்ற படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருந்த த்ரிஷா தற்போது சிரஞ்சீவி படத்தின் மூலம் மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்க போகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan