உக்ரைன் அதிபரை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டம்...
8 ஆவணி 2023 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 16668
ரஷ்ய உக்ரைன் போர் பல மாதங்களை கடந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதி திட்டத்தை மேற்கொண்டு வந்தள்ளது.
ரஷ்யாவின் சதி திட்டத்துக்கு உதவியதாக பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், உக்ரைனில் உள்ள ஆயுத கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவு தகவல்களை ரஷ்ய ராணுவத்திற்கு அப்பெண் கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.
பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், உக்ரைன் அதிகாரிகள் அவரைக் கைது செய்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இந்த சதி திட்டம் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan