Paristamil Navigation Paristamil advert login

கியூபெக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

கியூபெக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்கள்

11 பங்குனி 2024 திங்கள் 10:26 | பார்வைகள் : 8572


கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாகாணத்தின் பல பகுதிகளில் 45 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு, பனிப்புயல் மற்றும் மழை காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் மின்சார வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனிமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களின் மின் இணைப்பினை மீள வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்