உலகக்கோப்பைக்கு தகுதி பெறாததால் பதவி விலகிய கிரிக்கெட் இயக்குநர்

11 பங்குனி 2024 திங்கள் 08:42 | பார்வைகள் : 5575
ஜிம்பாப்பே கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறத் தவறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் இயக்குநர் ஹாமில்டன் மசகட்சா பதவி விலகினார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் நமீபியா, உகாண்டா அணிகள் தகுதி பெற்றன. ஆனால், தகுதிச்சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததால் ஜிம்பாப்பே அணி உலகக் கோப்பையில் விளையாடும் தகுதியை இழந்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்பே கிரிக்கெட் இயக்குநர் ஹாமில்டன் மசகட்சா (Hamilton Masakadza) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜிம்பாப்பே கிரிக்கெட் வாரியம் நேற்றைய தினம், முன்னாள் வீரரான ஹாமில்டன் பதவி விலகியதை நேற்று உறுதி செய்தது.
பதவி விலகியது குறித்து மசகட்சா கூறுகையில், ''எங்கள் கிரிக்கெட்டின் வெற்றி தோல்விகள் மற்றும் எனது பொறுப்புகளை கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனது பதவிக்காலத்தில் நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், உகாண்டாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த பிறகு, அடுத்த டி20 உலகக் கோப்பையில் பங்கேற்காத ஒரே முழு உறுப்பினர் நாடு நாங்கள் தான் என்பது தான் உண்மை'' என தெரிவித்தார்.
எனினும், 2026ஆம் ஆண்டில் ஐசிசி U19 ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை (2027) ஜிம்பாப்பே நடத்துவதால் அதில் ஈடுபட மசகட்சா தொடர்ந்து ஆர்வமாக உள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025