Paristamil Navigation Paristamil advert login

IPL 2024: புதிய சீருடையை அறிமுகம் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

IPL 2024: புதிய சீருடையை அறிமுகம் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

11 பங்குனி 2024 திங்கள் 08:38 | பார்வைகள் : 6332


இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்தது.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 -ம் திகதி முதல் தொடங்கவுள்ளது. 

இந்த தொடருக்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே நடைபெறுகிறது.

இந்த ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. 

இந்நிலையில், மற்ற அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கிவிட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்ததுள்ளது.

இது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "புதிய தோற்றம். 

ஐபிஎல் தொடரில் தீயாக விளையாடுவதற்கு அனைவரும் தயாராக உள்ளனர் என்று" கூறியுள்ளது.    

வர்த்தக‌ விளம்பரங்கள்