Paristamil Navigation Paristamil advert login

ஆஸ்கர் விழா மேடையில் நிர்வாணமாக தோன்றிய பிரபல நடிகர்

ஆஸ்கர் விழா மேடையில் நிர்வாணமாக தோன்றிய பிரபல நடிகர்

11 பங்குனி 2024 திங்கள் 06:03 | பார்வைகள் : 1345


92வது ஆஸ்கர் விருது விழா ஹாலிவுட்டில் கோலாகலமாக நடந்து வரும் நிலையில் அதில் ஹாலிவுட் நடிகர் ஜான்சீனா ஆடையில்லாமல் நிர்வாணமாக வந்தது வைரலாகியுள்ளது.

ஹாலிவுட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் அகாடமி விருதுகளில் 92வது எடிசன் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்காக ஓப்பென்ஹெய்மர், கில்லர் ஆப் தி ப்ளவர் மூன், புவர் திங்ஸ் உள்ளிட்ட முக்கியமான பல படங்கள் பரிந்துரையில் இருந்தன.

இதில் பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படும் நிலையில் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். அப்படியாக சிறந்த ஆடை அலங்காரத்திற்கான விருதை வழங்க பிரபல WWE வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான்சீனா அழைக்கப்பட்டார்.

அப்போது விருது அறிவிக்க வேண்டிய அட்டையை வைத்து கீழே அந்தரங்க பாகத்தை மட்டும் மறைத்துக் கொண்டு நிர்வாணமாக மேடையில் வந்து பேசினார் ஜான்சீனா. இதை பார்த்தும் ஹாலிவுட் பிரபலங்களிடையே பெரும் சிரிப்பலை எழுந்தது. பின்னர் பேசிய அவர் ஆண்கள் உடல் நகைச்சுவைக்கானது அல்ல என்று பேசினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் மரியாதையான ஒரு விருது விழாவில் ஜான்சீனா இவ்வாறு நடந்து கொண்டது தவறு என்று பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்