வெளிநாடுகளில் உள்ள 600 பேரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை!
11 பங்குனி 2024 திங்கள் 03:45 | பார்வைகள் : 8345
இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர முன்னெப்போதும் இல்லாத வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்திலும், தூதுவர் மட்டத்திலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருவதுடன், கலந்துரையாடல்கள் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபடும் எந்தவொரு குற்றவாளிகளும் துபாய் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில் நாட்டில் பாதுகாப்பு வலையமைப்பை நிலைநிறுத்துவதற்குப் பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பலர் இந்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மிக இலகுவாக துபாய் மற்றும் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதனால் அவர்கள் அந்த நாடுகளுக்குள் நுழைவதைத் தடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan