அழகு நிலையங்களுக்கு தடைவிதிக்கும் பிரபல நாடு
.jpg)
8 ஆவணி 2023 செவ்வாய் 11:21 | பார்வைகள் : 7160
ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
தாலிபன் அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தாலிபன்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகிறது.
அந்த வகையில் அழகு நிலையங்களை மூட ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது.
பெண்கள் தங்கள் கண்புருவங்களை திருத்தி அழகுபடுத்திக் கொள்வதும், முடியின் அடர்த்தியை அதிகரித்துக் கொள்ள வேறொருவரது முடியை இணைத்துக் கொள்வதும் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானவை என்று தாலிபன்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இறைவழிபாட்டிற்கு பெண்களின் இந்த அழகுபடுத்திக் கொள்ளுதல் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான் ஒரு மாத காலம் கெடு முடிந்ததால் அழகு நிலையங்களை மூட வேண்டும் என தாலிபன் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பெண்கள் மட்டும் தான் அழகு நிலையங்களை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.