Paristamil Navigation Paristamil advert login

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் - பேருந்து மீது கல்வீச்சு

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் - பேருந்து மீது கல்வீச்சு

8 ஆவணி 2023 செவ்வாய் 10:54 | பார்வைகள் : 7705


யாழ்ப்பாணத்தில் பஸ்ஸுக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸொன்று இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (08) யாழ் நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது.

இதன்போது அங்கு நின்ற பெண்ணொருவர் பஸ் மீது கல் வீசி தாக்கி பேருந்தை சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்