Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்

தி.மு.க.வுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்தது ஏன்? கமல்ஹாசன் விளக்கம்

10 பங்குனி 2024 ஞாயிறு 13:43 | பார்வைகள் : 7783


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவை தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. எனினும்,  ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது ஏன்? என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ மூலமாக விளக்கம் அளித்துள்ளார். 

கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:  தற்போதைய சூழல் தமிழ்நாட்டுக்கும் தேசத்துக்கும் பயனுள்ளாதக அமைய வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.   எதிர்வாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது. தேசத்திற்காக நாம் எல்லாம் ஒரே மேடையில் அமர வேண்டும். தமிழ்நாடு, தேசத்தின் நலனை காக்க எடுத்த முடிவு இது" என்று கூறியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்