கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை: இறுதிக் கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்
10 பங்குனி 2024 ஞாயிறு 05:50 | பார்வைகள் : 7608
கனடாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகளும் அந்நாட்டிலேயே முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டடிருப்பதாக கனடாவிலுள்ள பௌத்த காங்கிரஸ் அமைப்பின் தலைவரும் ஒட்டாவா ஹில்டா ஜயவர்தனாராமய விகாரையின் விகாராதிபதியுமான நுகேகலயாகே ஜினாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் விகாரை நன்கொடையாளர் சபையின் ஆதரவுடன் குறித்த ஆறு பேரின் இறுதிக்கிரியைகளையும் இடம்பெறும்.
இதற்கு அவர்களது குடும்பத்தாரும் விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் நுகேகலயாகே ஜினாநந்த தேரர் மேலும் தெரிவித்தார்.
கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்களான டிலந்திகா ஏகநாயக்க மற்றும் காமினி அமரகோன் ஆகியோரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சிலரை இறுதிச் சடங்குகளுக்காக கனடாவுக்கு அழைத்துவருவது தொடர்பில் கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த ஆறு பேரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கு பெருந்தொகை பணம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
மேலதிக விசாரணைகள் காரணமாக இதுவரையில் சடலங்களை கனேடிய பொலிஸார் உரிய தரப்பினரிடம் கையளிக்வில்லை.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan