இல் து பிரான்ஸ் : காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 15 பேர் கைது!
10 பங்குனி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 11533
போதைப்பொருள் கடத்தல் வழக்கொன்றில் தொடர்புடைய பதினைந்து பேர் இல் து பிரான்சுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்து, கடந்த வாரத்தில் 15 பேர் கொண்ட குழு ஒன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது. Essonne மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவந்த போதைப்பொருள் குழு ஒன்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்த Vitry-sur-Seine (Val-de-Marne) நகர நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காவல்துறை வீரர், பல்வேறு உள்ளக தகவல்களை அவர்களுக்கு வழங்கியதுடன், காவல்துறையினரிடம் சிக்காமல் போதைப்பொருள் கடத்துவதற்கான பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan