மின்சார வாகனங்களால் காற்று மாசு அதிகம் - ஆய்வில் தகவல்
9 பங்குனி 2024 சனி 08:58 | பார்வைகள் : 7400
பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan