ஏடன் வளைகுடா பகுதியில் தாக்குதலுக்குள்ளான கப்பலில் இலங்கையர்கள் மீட்பு

8 பங்குனி 2024 வெள்ளி 09:37 | பார்வைகள் : 8651
ஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்திற்கு அப்பால் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வணிகக் கப்பலின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை வீசி தாக்கியதில் காயமடைந்தவர்கள் உட்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
இந்திய கடற்படையினரால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
INS கொல்கத்தா கப்பல், ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் அந்த குழுவினர் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.