யாழில் 19 வயது யுவதியுடன் காதல் - 55 வயதுடைய நபர் அடித்துக் கொலை

8 ஆவணி 2023 செவ்வாய் 06:32 | பார்வைகள் : 9501
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் தாக்கப்பட்டு ஆண் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில், 19 வயதுடைய யுவதி ஒருவருக்கும், உயிரிழந்த 55 வயதுடைய நபருக்கும் தொடர்பு ஏற்பட்ட நிலையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர்கள் மீண்டும் சுன்னாகம் பகுதிக்கு நேற்று பிரவேசித்த நிலையில், அவர்களை மரம் ஒன்றில் கட்டி வைத்து சிறுமியின் உறவினர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், காயமடைந்த 55 வயதுடைய நபர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அத்துடன் சம்பவத்தில் காயமடைந்த குறித்த யுவதி சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் 23 முதல் 48 வயதிற்கிடைப்பட்டவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025