AI Technology- இந்தியாவின் முதல் Robot Teacher ஐரிஸ்.., கேரள பள்ளியில் அறிமுகம்
8 பங்குனி 2024 வெள்ளி 08:50 | பார்வைகள் : 10317
இந்தியாவில் கேரள பள்ளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு கொண்ட முதல் ரோபோ டீச்சர் அறிமுகம் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் கணினி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற அறிவை கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதனால், AI தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரோபோ ஆசிரியை மூலம் பாடம் கற்பிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ பாடம் கற்பிக்க அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதை மகேர் லாப்ஸ் இனம் கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்திருக்கிறது.
பாடத்தைக் கற்றுத்தரும் ஆசிரியர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்படியும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ரோபோ மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுப்பதோடு, அவர்களது சந்தேகங்களுக்கும் துல்லியமாகவும் பதிலளிக்கிறது.
இதன்மூலம், இந்தியாவின் முதல் AI ஆசிரியர் ரோபோ என்ற பெருமையை இந்த ஐரிஸ் ஆசிரியை ரோபோ பெற்றுள்ளது.
Voice Assistant வசதியுடன் 3 மொழிகளில் பல்வேறு பாடங்களில் இருந்து சிக்கலான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan