பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்!

7 மாசி 2024 புதன் 06:30 | பார்வைகள் : 7552
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நான் அடிமை இல்லை’ உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார். அவருக்கு வயது 71. சென்னையில் அவர் காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 80கள், 90களில் திரையுலகில் இளையராஜா பிரபலமான இசையமைப்பாளராக இருந்த நேரத்தில் ஒரு சில இசையமைப்பாளர்கள் திரை உலகில் அறிமுகமானார்கள். ஆனால் அவர்கள் இசையமைத்த சில அற்புதமான பாடல்கள் இளையராஜா இசையமைத்ததாகவே ரசிகர்களுக்கு தோன்றியது.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த ’நான் அடிமை இல்லை’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ’ஒரு ஜீவன் தான்’ என்ற பாடலை பலர் இளையராஜா தான் இசையமைத்திருப்பார் என்று எண்ணினர். ஆனால் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் விஜய் ஆனந்த் என்பவர் தான்.
’நான் அடிமை இல்லை’ வெற்றியை அடுத்து விஜய் ஆனந்த் விசுவின் பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக ’நாணயம் இல்லாத நாணயம்’ ’காவலன் அவர்கள் கோவலன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். மேலும் பிரபு நடித்த ’வெற்றி மேல் வெற்றி’ மற்றும் ’ஊருக்கு உபதேசம்’ ’வாய்ச் சொல்லில் வீரரடி’ உள்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இன்று காலமானார் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1