விஜய்யின் அரசியல் கட்சியை கலாய்த்தாரா நடிகர் வடிவேலு?

7 மாசி 2024 புதன் 06:25 | பார்வைகள் : 9131
விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் வடிவேலு ’அவ்வளவுதான், போதும், வாங்க இங்கிட்டு’ என்று காமெடியாக கூறியதை அவர் விஜய்யை கலாய்த்து உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது அரசியல் பிரவேசம் குறித்து தமிழ் திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு நேற்று ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தன்னுடைய அம்மா காலமாகி ஒரு வருடம் ஆகிவிட்டதை அடுத்து அவருக்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்காக புகழ்பெற்ற இந்த ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தேன். மேலும் ராமநாதசாமி கோவிலில் ராமநாதசாமி மற்றும் பர்வத வர்த்தினி ஆகியோரை தரிசனம் செய்ததாக வடிவேலு கூறினார்
இதனை அடுத்து விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு ’அவ்வளவுதான், போதும், வாங்க இங்கிட்டு’ என்று அவர் காமெடியாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் கருத்து கூற விரும்பவில்லையா? அல்லது விஜய்யின் அரசியல் கட்சியை கலாய்த்தாரா? போன்ற வாக்குவாதங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1