Paristamil Navigation Paristamil advert login

யாழில் காய்ச்சலினால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழில் காய்ச்சலினால் 14 மாத குழந்தை உயிரிழப்பு

6 மாசி 2024 செவ்வாய் 08:39 | பார்வைகள் : 13705


யாழில். இரண்டு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 14 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரகுராம் சந்திரா எனும் 14 மாத குழந்தையே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தைக்கு காய்ச்சல் காரணமாக பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, காய்ச்சலின் தீவிரம் காரணமாக குழந்தையை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து , குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்