இந்திய அணியின் தற்போதைய நிலை - ராகுல் டிராவிட்

31 ஆடி 2023 திங்கள் 06:21 | பார்வைகள் : 8969
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் கோலி, ரோகித்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் விளையாடினர்.
இதில் வழக்கத்திற்கு மாறாக அக்சர் படேல் இரண்டாவது வரிசையில் களமிறங்கி விளையாடினார்.
தோல்வியின் எதிரொலியாக விமர்சனங்கள் எழுந்தன.
ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியின் படுதோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இதுகுறித்து கூறுகையில், 'எங்கள் வீரர்களில் சிலரை முயற்சிக்க இதுவே கடைசி வாய்ப்பு.
காயம் அடைந்த எங்களின் சில வீரர்கள் NCA யில் உள்ளனர்.
ஆசிய கோப்பைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பல வழிகளில் நேரம் இல்லாமல் போகிறோம்' என தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1