Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் முன்னணி நடிகருடன் இணையும் த்ரிஷா…

மீண்டும் முன்னணி நடிகருடன் இணையும் த்ரிஷா…

6 மாசி 2024 செவ்வாய் 03:40 | பார்வைகள் : 7678


18 ஆண்டுகள் கழித்து மெகா ஸ்டார் உடன் மீண்டும் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு இது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’ஸ்டாலின்’ என்ற திரைப்படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு சிரஞ்சீவி மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கவில்லை

இந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து தற்போது சிரஞ்சீவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப விழா குறித்த வீடியோவை சிரஞ்சீவி வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த சிரஞ்சீவி அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்