Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை

பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர பயண எச்சரிக்கை

5 மாசி 2024 திங்கள் 15:08 | பார்வைகள் : 14854


சிவப்பு பாஸ்போர்ட் பயன்படுத்தும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு அவசர பயண எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா செல்ல திட்டமிடும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள், பாஸ்போர்ட் தொடர்பில், ‘ஆறு மாத செல்லுபடி விதி’ என்னும் விதி குறித்து தெரிந்துவைத்திருப்பது அவசியமாகும்.

அதாவது, பல நாடுகள், தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளின் பாஸ்போர்ட், குறைந்தபட்சம் இன்னும் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றன. இதுதான், ஆறு மாத செல்லுபடி விதி என அழைக்கப்படுகிறது.

VisaGuide.World என்னும் உலக பயண வழிகாட்டி அமைப்பின்படி, 70 நாடுகள் இந்த ஆறு மாத பாஸ்போர்ட் விதியைப் பின்பற்றுகின்றன. வேறு 41 நாடுகள், மூன்று மாத பாஸ்போர்ட் செல்லுபடி விதியைப் பின்பற்றுகின்றன.

ஆக, சிவப்பு பாஸ்போர்ட் பயன்படுத்தும் பிரித்தானியர்களைப் பொருத்தவரை, பிரெக்சிட்டுக்குப் பின் அந்த பாஸ்போர்ட் விநியோகிக்கப்படவில்லை. 

அதன் காலாவதி திகதியைக் கவனிப்பது அவசியமாகும். 

ஆகவே, சிவப்பு பாஸ்போர்ட் வைத்திருப்போர், பயணம் புறபடும் முன் தங்கள் பாஸ்போர்ட் இன்னும் எத்தனை மாதங்கள் வரை செல்லுபடியாகும் என்பதை கவனித்துக்கொள்வது அவசியமாகும்.

ஆக, மக்களுடைய வசதிக்காக, எந்தெந்த நாடுகள், எந்த பாஸ்போர்ட் செல்லுபடி விதியைப் பின்பற்றுகின்றன என்னும் விவரம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அங்குவிலா, பஹ்ரைன், பூடான், போட்ஸ்வானா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், புருனே, கம்போடியா, கேமரூன், கேமன் தீவுகள், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், கொமொரோஸ், குராக்கோ, கோட் டி ஐவோயிர், ஈக்வடார், எகிப்து, எல் சால்வடார், ஈக்வடோரியல் கினியா, ஃபிஜி, காபோன், கினியா பிசாவ், கயானா, இந்தோனேசியா, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், கென்யா, கிரிபாதி, லாவோஸ், மடகாஸ்கர், மலேசியா, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா, மியான்மர், நமீபியா, நிகராகுவா, நைஜீரியா, ஓமன், பலாவ், பப்புவா நியூ கினியா , பிலிப்பைன்ஸ், கத்தார், ருவாண்டா, செயின்ட் லூசியா, சமோவா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், சாலமன் தீவுகள், சோமாலியா, சோமாலிலாந்து, இலங்கை, சூடான், சுரினாம், தைவான், தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, டோகெலாவ், டோங்கா, துவாலு, உகாண்டா, ஐக்கிய அரபு அமீரகம், வானுவாட்டு, வெனிசுலா, வியட்நாம், ஏமன் மற்றும் ஜிம்பாபே.

அல்பேனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பெலாரஸ், பெல்ஜியம், போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினா, செக்கியா, எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜார்ஜியா, ஜெர்மனி, கிரீஸ், ஹோண்டுராஸ், ஐஸ்லாந்து , இத்தாலி, ஜோர்டான், குவைத், லாத்வியா, லெபனான், லைசென்டெயின், லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, மால்டோவா, மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நவ்ரு, நெதர்லாந்து, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, பனாமா, போலந்து, போர்ச்சுகல், செனகல், சுலோவாக்கியா, சுலோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து.

சில நாடுகள், நீங்கள் அந்த நாட்டுக்குள் நுழைந்ததும், உங்கள் பாஸ்போர்ட் இனி எத்தனை மாதங்கள் செல்லுபடியாகும் என்பதை கணக்கில் கொள்கின்றன. அவையாவன...

பெர்முடா (45 நாட்கள்), எரித்திரியா (மூன்று மாதங்கள்), ஹாங்காங் (மூன்று மாதங்கள்), லெபனான் (மூன்று மாதங்கள்), மக்காவ் (மூன்று மாதங்கள்), மைக்ரோனேஷியா (நான்கு மாதங்கள்), தெற்கு ஆப்பிரிக்கா (மூன்று மாதங்கள்), மாலத்தீவுகள் (மூன்று மாதங்கள்), மற்றும் ஜாம்பியா (நான்கு மாதங்கள்).

வர்த்தக‌ விளம்பரங்கள்