கேப்ரியல் அத்தாலின் அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லா பிரேரணை! - 124 வாக்குகள் பதிவு!
5 மாசி 2024 திங்கள் 13:49 | பார்வைகள் : 10740
கேப்ரியல் அத்தாலின் தலைமையிலான அரசாங்கம் மீது இன்று திங்கட்கிழமை காலை நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு, வாக்கெடுக்கப்பட்டது.
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் அரசாங்கத்துக்கு எதிராக 124 வாக்குகள் பதிவாகின. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற குறைந்தது 289 வாக்குகள் (பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களில் அரைவாசி) தேவை எனும் நிலையில், இந்த குறைந்த அளவு வாக்கினால், நம்பிக்கை இல்லா பிரேரணை நிராகரிக்கப்பட்டது.
பிரதமர் கேப்ரியல் அத்தால் எதிர்கொண்ட முதலாவது நம்பிக்கை இல்லா பிரேரணை இதுவாகும். அவர் பிரதமராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தின் பின்னர் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025

























Bons Plans
Annuaire
Scan