Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கப்படும் 3,000 பாடசாலைகள்!

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கப்படும் 3,000 பாடசாலைகள்!

5 மாசி 2024 திங்கள் 11:05 | பார்வைகள் : 7181


இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்து வித்தியாலயத்தில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 3,000 உயர்தர பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்