இலங்கையில் பூஜைக்கு சென்ற மூவருக்கு நேர்ந்த விபரீதம்
31 ஆடி 2023 திங்கள் 03:49 | பார்வைகள் : 13358
ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் தங்க நகைகளை பெண்ணொருவர் அபகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அபகரிக்கப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி 8 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது இனந்தெரியாத பெண் ஒருவர் அருகில் வந்து கழுத்திலிருந்த நகைகளை தந்திரமாக அபகரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் 3 பெண்களும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறித்த மூவரும் அநுராதபுரம், யட்டியந்தோட்டை மற்றும் ராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 70, 68, 58 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan