Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

30 ஆடி 2023 ஞாயிறு 10:06 | பார்வைகள் : 8041


இலங்கையில் வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது அவசியமானால் அதற்கான கொள்கைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சி தெரிவித்திருந்தார்.

வாகன இறக்குமதியின் போது நாட்டுக்கு பொருத்தமற்ற வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் பெருமளவிலான வெளிநாட்டு பணம் நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனி வரும் காலங்களில் தவறை சரி செய்ய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்