Paristamil Navigation Paristamil advert login

'தங்கலான்' மீண்டும் தள்ளி போகிறதா?

 'தங்கலான்' மீண்டும் தள்ளி போகிறதா?

5 மாசி 2024 திங்கள் 04:22 | பார்வைகள் : 7309


இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டது.

இந்த படத்தின் கிராபிக்ஸ் உட்பட ஒருசில தொழில்நுட்ப பணிகள் காலதாமதம் ஆனதன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஏப்ரல் மாதமும் இந்த படம் ரிலீஸ் ஆவது சந்தேகம் என்று கூறப்படுகிறது

மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதற்கு தொழில்நுட்ப பணிகள் அதிகம் இருப்பதாக காரணமாக சொன்னாலும் உண்மையில் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் படத்தின் ரிலீஸ் செய்து தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே தேர்தல் முடிந்து, ரிசல்ட் வந்தவுடன் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே எந்த தேதியில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும். தற்போது டப்பிங் எடிட்டிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில் அதிகாரப்பூர்வமான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்