துரோகத்தாலேயே வீழ்வார் பழனிசாமி ! அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்
5 மாசி 2024 திங்கள் 03:08 | பார்வைகள் : 9521
திண்டுக்கல்லில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது:
தீய சக்தி தி.மு.க.,வுடன் நாங்கள் எப்படி பயணிக்க முடியாதோ, அதுபோல துரோக சக்தியான பழனிசாமியுடனும் நானோ, அ.ம.மு.க., தொண்டர்களோ பயணிக்க மாட்டார்கள்.
எக்காலத்திலும் பழனிசாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம். துரோகத்தினாலேயே அரசியலிலிருந்து வீழ்வார் பழனிசாமி.
அதே நேரம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்களாக தங்களை நம்புபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan