விஜய் சேதுபதி படத்திற்கு இப்படி ஒரு தலைப்பா?

4 மாசி 2024 ஞாயிறு 09:05 | பார்வைகள் : 8727
நடிகர் விஜய் சேதுபதியின் 51வது படத்தை பி.ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து வருகிறார். யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிருத்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மலேசியாவைச் சுற்றி நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு 'சத்தியமா பொய்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.