அடுத்த தளபதி தனுஷா? சிவகார்த்திகேயனா?
3 மாசி 2024 சனி 14:50 | பார்வைகள் : 13092
அரசியல் களத்தில் நடிகர் விஜய் குதித்துள்ளதை அடுத்து, அடுத்த விஜய் சிவகார்த்திகேயனா தனுஷா என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடிகர் விஜய் பலருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். நேற்று இவர் கட்சியை அறிவித்ததோடு ‘ஊழலற்ற மற்றும் சாதி பேதமற்ற கட்சி, நல்லாட்சி’ என்ற உறுதி மொழியையும் அவர் கொடுத்துள்ளார். மேலும் வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், எதிர்வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்தான் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார் விஜய். இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வேலைகள் நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் தற்போது நடித்து வரும் ‘GOAT' மற்றும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ‘தளபதி69’ படத்தைத் தவிர வேறு எந்தப் புதிய படங்களும் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவை விட்டு விலகுவேன் எனவும் கூறியுள்ளது ரசிகர்களை வருத்தமடையச் செய்துள்ளது. விஜயை இனி திரையில் பார்க்க முடியாது எனவும் பல ரசிகர்கள் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில்தான் இப்போது அடுத்த விஜய் யார் என்ற கேள்வியும் விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜய் எப்படி ரஜினி வழியைப் பின்பற்றி வந்தாரோ அதுபோலவே, நடிகர் விஜய் வழியை சிவகார்த்திகேயன் பின்பற்றி வருகிறார். கமர்ஷியல் படங்கள் மற்றும் குடும்பம், குழந்தைகளை அவர் வெகுவாகக் கவர்ந்துள்ளார். எனவே, அவர்தான் அடுத்த சிவகார்த்திகேயன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம், தனுஷ் இப்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளார். கடின உழைப்பைக் கொடுத்தே அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். எனவே அவர்தான் அடுத்த விஜய் என்றும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan