‘தலைவர் 171’ படத்திற்கு 'கோட்' படத்தின் டெக்னாலஜியை பயன்படுத்தும் லோகேஷ்..

3 மாசி 2024 சனி 12:10 | பார்வைகள் : 6169
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 171’ படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடித்து வரும் ’கோட்’ திரைப்படத்தில் அவரை இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக டீ-ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது. இதற்காக விஜய் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்தார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் இதே டெக்னாலஜியை லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ரஜினியை இந்த படத்தில் இளமையாக காண்பிக்க அவர் இந்த டெக்னாலஜியை கையில் எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே ‘தலைவர் 171’ திரைப்படத்தில் ரஜினியை இளமையாக பார்க்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025