இந்திய அணியின் வீரர் ஜெய்ஸ்வாலின் இரட்டை சதம்

3 மாசி 2024 சனி 10:56 | பார்வைகள் : 6815
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இரட்டைச்சதத்தை கடந்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்டநேர முடிவில், 6 விக்கட் இழப்பிற்கு 336 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜெய்ஸ்வால் 176 ஓட்டங்களை பெற்று முதல் நாள் ஆட்டத்தில் ஆட்டமிழக்காது இருந்தார்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த அவர் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை கடந்தார்.
இதன்படி அவர் 290 பந்துகளை எதிர்கொண்ட அவர் 19 நான்கு ஓட்டங்கள், 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 209 ஓட்டங்களை குவித்து ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜெய்ஸ்வால், இன்றைய இரட்டை சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, வினோத் காம்ப்ளி 21 வயதில் இரண்டு முறை இரட்டை சதம் கடந்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025