Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்தில் பட்டாசு வெடித்து பாரிய விபத்து...! 9 பேர் பலி

தாய்லாந்தில் பட்டாசு வெடித்து பாரிய விபத்து...!  9 பேர் பலி

30 ஆடி 2023 ஞாயிறு 08:16 | பார்வைகள் : 3315


தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில்  வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் 115 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு மாகாணமான நராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது.

கட்டிடத்தின் வெல்டிங் பணியின் போது இந்த வெடிப்பு ஏற்பட்டது.

தற்போது தீயணைப்பு வீரர்களால்  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், இரும்பு வெல்டிங் பணியின் போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக நாரதிவாட் ஆளுநர் சனன் பொங்கக்சோர்ன் தெரிவித்தார்.

வெடிப்பு 500 மீட்டர் (1,640 அடி) சுற்றளவில் சேதத்தை ஏற்படுத்தியதாக உள்ளூர் மக்கள் தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனர்த்தத் தடுப்பு மற்றும் தணிப்புத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, அப்பகுதியில் உள்ள சுமார் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்