இலங்கையில் இளைஞனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கிய கும்பல்
2 மாசி 2024 வெள்ளி 13:53 | பார்வைகள் : 6159
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞன் ஒருவரை கடத்திச் சென்ற குண்டர்கள் குழுவொன்று காட்டுப்பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து குட்டிகல மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸார் இணைந்து குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையினால் இளைஞனின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எம்பிலிப்பிட்டிய, கிருலவெல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், பொலிஸார் அந்த இடத்தை சுற்றிவளைத்த போது, குற்றவாளிகள் வேனில் தப்பிச் சென்றதாகவும், சந்தேகநபர்களில் ஒருவர் பெரும் முயற்சியில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan