உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்! மூடப்பட்ட ரஷ்ய விமான நிலையம்

30 ஆடி 2023 ஞாயிறு 07:57 | பார்வைகள் : 9022
ரஷ்ய உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து ரஷ்யாவில் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக நேற்றிரவு 29 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து 500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 03 ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொஸ்கோ விமான நிலையத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1