நடிகை பூனம் பாண்டே 32 வயதில் காலமானார் .. நடந்தது என்ன?
2 மாசி 2024 வெள்ளி 10:04 | பார்வைகள் : 11045
பிரபல பாலிவுட் நடிகையும் மாடல் அழகியுமான பூனம் பாண்டே சற்றுமுன் காலமானதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 32.
பூனம் பாண்டே காலமானதை அவரது மேலாளர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து கூறிய போது ’இன்று காலை எங்களுக்கு கடினமான செய்தி வந்தது. கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை நாங்கள் இழந்து விட்டோம் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதனை அடுத்து அவரது ஆத்மா சாந்தியடைய ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறியப்பட்டதாகவும் இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது இறுதி சடங்குகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.
பூனம் பாண்டே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றினால் நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன் என்று பரபரப்பாக அறிவித்தவர் தான் பூனம் பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan