முழு சூரிய கிரகணம் : 100 ஆண்டுகளுக்கு பின் வானில் நிகழும் அதிசயம்

2 மாசி 2024 வெள்ளி 08:52 | பார்வைகள் : 5238
பொதுவாகவே கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என்பவை வழக்கமாக தோன்றுவதாகும். ஆனால் இந்த முழு சூரிய கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பின் வருகிறது.
வருகிற ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியன்று இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.
வட அமெரிக்காவின் மெக்சிகோவில் பகுதியில் தோன்றி வட அமெரிக்கா, கனடா வரை செல்லும் என கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மெக்சி்கோவின் பசிபிக் கரையில் காலை 11 மணியளவில் தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணத்தின் மொத்த கால அளவு 4 மணி 39 நிமிடங்கள் இருக்கும்.
இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், வட துருவம், தென் துருவம் ஆகிய பகுதிகளில் தெரியும்.
மேலும் நூறு ஆண்டுகளின் பின்னர் வட அமெரிக்காவில் நிகழும் கிரகணமாகும். இதை அங்கு வாழும் மக்கள் தவறவிட்டால், பார்ப்பதற்கு நூறு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025