யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவு

29 ஆடி 2023 சனி 14:27 | பார்வைகள் : 10002
யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் பட்டதாரி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் பகுதியில் நேற்று இரவு இந்த துயர சம்பவம் நடந்தது.
சற்குணரத்தினம் கௌசி என்ற 27 வயதுடைய மாணவியே தனது வீட்டில் தூ.க்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்ற குறித்த மாணவி அண்மையில் தான் பட்டம் பெற்றிருந்தார் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பட்டமளிப்புக்கு பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவமானது யுவதியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025