ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சார்பட்டா 2 திருப்புமுனையை ஏற்படுத்துமா?
31 தை 2024 புதன் 14:30 | பார்வைகள் : 10167
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னர் வெளியான ’காபி வித் காதல்’ ’வசந்த முல்லை’ ’கேப்டன்’ ’எனிமி’ ’அரண்மனை 3’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் வெற்றி மட்டுமே ஆர்யாவை இன்னும் தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் ’தங்கலான்’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தில் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி நடிகர் ஆர்யா இப்போதே ஒரு குத்துச்சண்டை வீரருக்கான உடலை அமைப்பதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் இந்த படம் ஆர்யாவுக்கு மட்டுமின்றி இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan