கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன்..?
31 தை 2024 புதன் 12:02 | பார்வைகள் : 7311
கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்த தமிழ்நாட்டின் வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஏற்கனவே ஒரு சிலர் தயாரிக்க முன்வந்தனர்.
குறிப்பாக ’ஊமை விழிகள்’ இயக்குனர் ஆர் அரவிந்தராஜ் வேலு நாச்சியார் என்ற பெயரில் ஒரு படத்தை தான் இயக்க இருப்பதாகவும் அறிமுக நடிகை ஆயிஷா என்பவர் வேலுநாச்சியார் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ’வேலுநாச்சியார்’ என்ற ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் ’தூங்காவனம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இந்த படத்தை இயக்க இருப்பதாகவும், வேலுநாச்சியார் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ராஜேஷ் எம் செல்வா வட்டாரத்தில் கூறிய போது ’வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை அமைக்கும் பணி நடைபெற்று வருவது உண்மைதான். ஆனால் இன்னும் நடிகர், நடிகையர் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் எப்படி பரவியது என்பதே எங்களுக்கு தெரியவில்லை. தற்போதைய நிலையில் திரைக்கதை அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. முழு ஸ்கிரிப்ட் தயாரான பின்னர் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறும் என்று கூறினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan