கால்வாயில் கிடந்த பிரிட்ஜில் பெண்ணின் உடல் பாகங்கள்... அதிர்ச்சி சம்பவம்

29 ஆடி 2023 சனி 07:47 | பார்வைகள் : 10534
பெல்ஜியத்தின் Liege நகரில் உள்ள கால்வாயில் குளிர்சாதனப் பெட்டி ஒன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனுள் மனித உடல்பாகங்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் என அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து துப்பறியும் நிபுணர்கள் எஞ்சிய உடல்பாகங்களை அருகில் உள்ள ஆற்றில் கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸார் இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற தாயை கொலை செய்து இவ்வாறு செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும் தென் கொரியாவுக்கு செல்ல அவர் தயாராகி இருந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1