ஜாதி, மத அரசியலை ஒழிப்பதே பா.ஜ., நோக்கம்: அண்ணாமலை பேச்சு

30 தை 2024 செவ்வாய் 16:16 | பார்வைகள் : 7231
ஜாதி, மத அரசியலை ஒழிப்பதே பா.ஜ.,வின் நோக்கம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டசபை தொகுதியில், ‛‛என் மண், என் மக்கள்'' பாதயாத்திரையை அண்ணாமலை மேற்கொண்டார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கான அரசியலாக உள்ளது. சாதாரண மக்களுக்கான அரசியலாக இல்லை. படிப்புக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லை. தண்ணீர் பிரச்னையால் விவசாயம் செய்ய முடியவில்லை.
இந்த யாத்திரையின் மூலம் புதிய அரசியலை கொண்டு வர வேண்டும். பா.ஜ., ஆட்சியில் ஜாதி, மத, அடாவடி, குடும்ப அரசியலுக்கு இடம் கிடையாது. தமிழகத்தின் முக்கியமான பிரச்னை, தரமான கல்வி கிடைக்கவில்லை. தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரமில்லாமல் இருக்கிறது. எந்த பணமும் வாங்காமல், உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களும், இந்த சமுதாயத்தில் முக்கியமான மனிதர்களாக வர வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 31 மாதங்கள் ஆகிறது. 70ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஸ்டாலின் ரூ.6 ஆயிரம் கொடுத்தார் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பணம் யாருடையது. ரூ.6 ஆயிரம் மத்திய அரசு பணம். ஆனால் பணத்தை கொடுத்த கவர் மட்டும் தி.மு.க., அரசு உடையது. ஒரு கவர் விலை ரூ.2. தி.மு.க., அரசை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால், மாப்பிள்ளை எங்களதுங்க, சட்டை உங்களதுங்க என கூற முடியும் என்றார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025