Paristamil Navigation Paristamil advert login

சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்!

சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ ஆர் ரஹ்மான்!

30 தை 2024 செவ்வாய் 07:42 | பார்வைகள் : 6824


ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிவரும் நிலையில் இப்போது பாடல்கள் பற்றி ஒரு சர்ச்சை வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாடலில் அதன்படி, 1997ல் மறைந்த ஷாகுல் ஹமீது மற்றும் 2022 ஆம் ஆண்டு மறைந்த பம்பா பாக்கியாவின் குரல்களை செயற்கை  நுண்ணறிவு (ஏஐ) மூலமாக லால் சலாம் படத்தின் திமிறி எழுடா என்ற பாடலில்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இது சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில் அதற்கு ஏ ஆர் ரஹ்மான் பதிலளித்துள்ளார். அதில் “பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோரின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றே அவர்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டன. அதற்கு சன்மானமும் வழங்கப்பட்டது. முறையாக பயன்படுத்தினால் தொழில்நுட்பம் அச்சுறுத்தலாக இருக்காது” எனக் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்